திருச்செங்கோட்டில் நவராத்திரி நாலாம் நாள் விழா கொலுவைத்து கோலாகல கொண்டாட்டம்பக்தி பாடல்கள் பாடி பிரசாதம் வழங்கி பெண்கள் நவராத்திரியை கொண்டாடி மகிழ்ந்தனர்

திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலம் நாலாம் நாள் நவராத்திரி விழாகுழுவைத்து கொலு வைத்து தோத்திரப் பாடல்கள் பாடி வீடுகளில் பெண்கள் கொண்டாட்டம். அம்மன் கோவில்களில்குழு மற்றும் சிறப்பு அலங்காரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு
நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி இருக்கும்  விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் கடைபிடிக்கப் படுகிறது. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியையும்  இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளையும் வழிபடுகின்றனர். புரட்டாசி மாத அமாவாசை கழிந்தவளர்பிறை பிரதமை திதியில் இருந்து  நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது பத்தாவது நாள் விஜயதசமி என நாடு முழுவதும் பக்தர்கள் இதனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் இதன்படி திருச்செங்கோட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பிரம்மாண்ட கொலு வைக்கப்பட்டு ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.நவராத்திரி விழாவை வீடுகளிலும் கொலுவைத்து அந்தந்த பகுதியில் உள்ள பெண்கள் ஒன்று திரண்டு ஸ்தோத்திரப் பாடல்களை பாடி சித்ரா அன்னங்கள் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி கொண்டாடுகின்றனர்.அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உபகோவிலான பத்ரகாளியம்மன் கோவில் வைக்கப்பட்டுள்ள கொலுவில் பல்வேறு நிகழ்ச்சிகளை திருமணம்,வளைகாப்பு மொட்டை அடித்து  காது குத்துதல்,வாராஹி அம்மனின் உருவங்கள், புராண கதைகள், சித்தர்கள் மற்றும் விலங்குகள் காய்கறிகள் நாட்டிற்கு பாடுபட்ட பெருந்தலைவர்கள் உருவங்கள் கொலுவில் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான இன்று திருமணத்தடை நீங்கவும் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் வளையல்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிங்கபுரத்து அமிர்த வள்ளியம்மாளாக காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நவராத்திரியை ஒட்டி அம்பாள் லிங்க தாரணியாக இன்றைக்கு காட்சி அளிக்கிறார். கோவில்கள் மட்டுமல்லாது வீடுகளிலும் கொள வைக்கப்பட்டு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது கொல்லப்பட்டியில் உள்ள ராணி ரவி என்பவரது வீட்டில் பிரம்மாண்ட கொலுக்கண்காட்சி வைக்கப்பட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு பெருமானின் பிறப்பை காட்டும் வகையிலும், கீதா உபதேசம், பள்ளிக்கூடம், கதாகாலட்சேபம், கும்பகர்ணன், உள்ளிட்ட பல்வேறு வகையான வித்தியாசமான சிலைகள் வைக்கப்பட்டு கொலு கண்காட்சி நடத்தப்பட்டது. கொல்லப்பட்டி பகுதியில் ஆயிரம் திரு விளக்கு பூஜை நடத்தும் குழுவைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து இந்த கொலுவை வைத்துள்ளனர் இதில் திருவிளக்கு பூஜைக்கு வரும்அனைத்து பெண்களும் அழைக்கப்பட்டு பக்தி பாடல்களை பாடி சுமார் மூன்று மணி நேரம் கொண்டாடுகின்றனர்.தொடர்ந்து ஐந்து வருடங்களாக கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடி வருவதாகவும் இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்வதாகவும் தெரிவித்தனர். பக்தி பாடல்கள் பாடி முடித்ததும்சிறப்பு தீபாராதனை காட்டி குழுவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சித்ரா அன்னங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story