ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் "உலக மருந்தாளுனர் தினம்" கொண்டாட்டம்..

X
Rasipuram King 24x7 |25 Sept 2025 9:49 PM ISTராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் "உலக மருந்தாளுனர் தினம்"
"உலக மருந்தாளுனர் தினம்" நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் "உலக மருந்தாளுனர் தினம்" மருத்துவமனை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது . இதில் தலைமை மருத்துவ அலுவலர் திருமதி டாக்டர் K .கலைச்செல்வி. தலைமை வகித்தார் .ஓய்வு பெற்ற தலைமை மருந்தாளுநர் A. ராஜு அனைவரையும் வரவேற்றார். மருத்துவமனை மருந்தாளுனர் V.தருன், ஷாலினி, காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக "ஓய்வு பெற்ற தலைமை மருந்தாளுனர் கள்". ராணி, S. செல்வி, ஆகியோர் கலந்துகொண்டு மருந்தாளுனர் சேவைகள் பற்றி நோயாளிகளுக்கு, மருந்தாளுனர்கள் ,மருந்து, மாத்திரை சாப்பிடுவது குறித்தும் நன்மைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்கள். தொடர்ந்து A.ராஜு அவர்கள் வாழ்த்தி பேசுகையில் பார்மசிஸ்ட் (PHARMACIST) பற்றியும் "தன்னலமற்ற சேவைகள்" பற்றியும் விரிவாக பேசினார். இவர்களுடன் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி சிறப்புரை ஆற்றினார்கள் மருந்தாளுனர்கள் நேரம்,காலம் என்று பாராமல் மிக நேர்மையாக, தொய்வின்றி, சேவைகள் செய்கின்றனர் என வாழ்த்தி பேசினார் உடன், தலைமை செவிலியர்கள் மகாலட்சுமி, மாதேஸ்வரி, மற்றும் செவிலியர்கள், சசிகலா,மேனகா, லதா, பிரியா மற்றும் TB கவுன்சிலர் சுகந்தா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் வாழ்த்தி பேசினார்கள் . மேலும் அனைத்து மருந்தாளர்களும் "கேக் வெட்டி" இனிப்புகள், வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். அனைவருக்கும் "பொன்னாடை அணிவிக்கப்பட்டது" முடிவில் மருந்தாளுனர் முருகேசன், நன்றி கூறினார்.
Next Story
