வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அலுவலக பணியை புறக்கணித்து நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் மாவட்டத் தலைவர் துரைவேல் தலைமை வகித்தார். பிரபு, சிவன் முன்னிலை வகித்தனர் முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனுக்களை முடிவு செய்ய போதிய அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அதிகமான பணி நெருக்கடி ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
Next Story