அரசு பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் துவக்கம்

அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பிலாஸ்டிக் மற்றும் புற்களை தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை செய்தனர்
தருமபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை சார்ந்த மாணவர்கள் பாரத பிரதமர் அவர்களின் உயரீய திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை நேற்று வியாழக்கிழமை மாலை தூய்மை செய்தனர். இதில் பள்ளியில் உள்ள பிலாஸ்டிக் மற்றும் புற்களை தூய்மை செய்தனர் இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் காமராஜ் தொடங்கி வைத்து தூய்மை இந்தியா திட்டத்தினுடைய அவசியம் பற்றியும் சுற்றுப்புறத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது, வீட்டை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது, மாணவர்கள் எவ்வாறு தூய்மையாக இருப்பது போன்ற சுத்தமாக இருப்பது பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் முருகேசன் செய்திருந்தார்.
Next Story