மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

காரிமங்கலம் திமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் .
தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர் வரவேற்றார். தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், அன்பழகன், கண்ணபெருமாள், பஞ்சப்பள்ளி அன்பழகன், முனியப்பன், ஆனந்தன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமை வகித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனை வழங்கி பேசினார். மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசும்போது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதியும் வெற்றி பெற செய்ய வேண்டும் இதில் குறிப்பாக பாலக்கோடு தொகுதி தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது அதை முறியடித்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் அதற்கு கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பாடப்பட வேண்டும். என்று மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் சேர்மன் முரளி, சீனிவாசன், அரசு வழக்கறிஞர் முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் இளைஞர் அணி மகேஷ் குமார், விவசாய அணி குமார், நிர்வாகிகள் தங்கதுரை, செந்தில்குமார், குட்டி, தமிழரசன், கிருஷ்ணன், சுரேஷ் ஐ டி விங் பரணி சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story