காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது காங்கேயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காங்கேயம் வட்டார அளவிலான வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் முகாம் நடத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும் நாளை உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு செல்லாமல் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர். இதனால் நாளை நடைபெற உள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம் செல்லும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்கின்றனர். இந்த முகமானது கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது , முன்னிலை பழனிசாமி கோட்டை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொக்கர் ஆகியோர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story




