தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டி

X
தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் திண்டுக்கல் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் 44-வது சப் ஜூனியர் மற்றும் 71-வது சீனியர் பிரிவுக்கான தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நேற்று துவங்கியது. துவக்க விழா நிகழ்ச்சிக்கு, பி.எஸ்.என்.ஏ., கல்லூரி முதன்மை சேர்மன் ரகுராம் தலைமை வகித்தார். கல்லூரி அறங்காவலர் சூர்யா ரகுராம், இந்திய பூப்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜா ராவ், மாநில பூப்பந்தாட்ட கழக பொதுச் செயலாளர் விஜய், மாநிலத் தலைவர் நடேசன், உதவித் தலைவர் சீனிவாசன், நாராயணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் சரவணன் போட்டியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு பூப்பந்து விளையாட்டு வீரர் பரமசிவம் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்தார். இதில் சப் ஜூனியர், சீனியர் பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் 21 மாநில அணிகளும், ஆண்கள் பிரிவில் 21 மாநில அணிகள் கலந்து கொண்டனர். சீனியர் பிரிவில் 29 மாநில பெண்கள் அணியினரும், 27 மாநில ஆண்கள் அணிகளை சேர்ந்த 1600க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஸ்டார் ஆப் இந்தியா விருது வழங்கப்படுகிறது.
Next Story

