வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்

வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்
X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல் வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் பாஸ்டின், மகேஸ்வரன், விக்னேஷ், குழந்தை தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி வாழ்த்துரை வழங்கினார். வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி சிறப்புரை ஆற்றினார். இதில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்ச வரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, ஏற்கனவே இருந்த 25% ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் அளித்தனர். போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story