கோவை: வருவாய்த் துறையினர் காத்திருப்புப் போராட்டம்

X
கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழக அரசின் கூடுதல் பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த் துறையினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான மனுக்களை உடனடியாகப் பதிவு செய்து தீர்வுகாண அரசு நிர்பந்திப்பதால், வழக்கமான பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். ஒன்பது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பணிச்சுமையை குறைக்கும் மாற்று ஏற்பாடுகளை செய்யவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இல்லையெனில் மாநிலம் தழுவிய பெரும் போராட்டம் நடத்த எச்சரித்துள்ளனர். இந்த போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலகப் பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
Next Story

