தமிழ்நாடு ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் முதலிடம் – அமைச்சர் அன்பரசன் பேட்டி !

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் முதலிடம் – அமைச்சர் அன்பரசன் பேட்டி !
X
கோவையில் உலக புத்தொழில் மாநாடு: தமிழ்நாடு ஸ்டார்ட்அப் முன்னணி நிலை வகிக்கிறது என அமைச்சர் அன்பரசன் விளக்கம்.
கோவையில் அக்டோபர் 9, 10 தேதிகளில் நடைபெற உள்ள உலக புத்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். அவிநாசி சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு தற்போது இந்தியாவில் ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாகவும், 2021-இல் 232 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 12,000-ஐ கடந்துவிட்டதாகவும் கூறினார். இதுவரை 212 ஸ்டார்ட்அப்களில் ரூ.79.40 கோடி அரசு முதலீடு செய்யப்பட்டது. அதில் 68 நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.554.49 கோடி ஈர்த்துள்ளன. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், 43 எஸ்சி/எஸ்டி ஸ்டார்ட்அப்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் அன்பரசன் மேலும், சிறு தொழில்கள் எதிர்கொள்ளும் மின்சாரச் சுமையை குறைக்க மாநில அரசு வருடத்திற்கு ரூ.250 கோடி வழங்கி வருவதாகவும், உரிமம் மற்றும் மின் இணைப்பில் பிரச்சனை இருந்தால் உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். ஜி.எஸ்.டி குறைப்பின் தாக்கம் குறித்து, “அதன் பயன் குறைந்தது ஒரு வாரத்திற்கு பிறகே தெளிவாகத் தெரியவரும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story