மனைவி மாயம். கணவர் புகார்.

மனைவி மாயம். கணவர் புகார்.
X
மதுரை திருமங்கலத்தில் மனைவி மாயமான கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கண்டு குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மனைவி வேல்மணி (24) என்பவர் கோச்சடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் ( செப். 24) காலை 9 மணி அளவில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எனவே இவரது கணவர் நேற்று காலை (செப்.25) திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story