பைக் - கேரளபஸ் மோதி காவலாளி உயிரிழப்பு

பைக் - கேரளபஸ் மோதி காவலாளி உயிரிழப்பு
X
தக்கலை
குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் சுசி (69). இவர் இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவ தினம் இவர் பைக்கில் நாகர்கோவில்  நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லுகுறி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கேரளா அரசு பஸ் பைக்கில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சுசியை மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுசி நேற்று உயிரிழந்தார்.  இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனை சென்று தக்கலை போலீசார் சுசியின் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் திருவனந்தபுரம், நெல்லிமூடு பகுதி சேர்ந்த பிரவீன் குமார் (29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story