புனித மைக்கேல் அதிதூதர் சர்ச்சில் கொடியேற்ற விழா
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கம்மங்குடி பட்டியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவை முன்னிட்டு மேல தாளங்கள் முழங்க மந்திரித்து கொடிபவனி கம்மங்குடி பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றது. அதனைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
Next Story




