மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வெள்ளப் பெருக்கு

X
குமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் தென்னிந்தியாவிலேயே மிக நீளமான போக்குவரத்து மேம்பாலம் 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் பாலத்தில் பராமரிப்பு பணிகள் இல்லாதததால் பல்வேறு குற்றசாட்டுகளும் எழுந்துள்ளது. நேற்று பெய்த கன மழையில் பாலத்தின் மேல் பகுதியில் தண்ணீர் பல மீட்டர் தூரம் ஆறு போல் தேங்கியது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. பாலத்தில் வெள்ளம் தேங்கிய வீடியோ உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தில் சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

