குழித்துறை :  மெகா தூய்மைப்பணி

கன்னியாகுமரி
குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட இட விளாகம் ரயில்வே பாதை பகுதியின் மறுபுற  ஒதுக்கு புறமான இடத்தில் அதிகாலை வேளையில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்தவர்கள்  குப்பைகள் கொட்டுவது வழக்கம். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் நேற்று குதித்துறை நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மெகா தூய்மை பணி நடந்தது. நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி துவக்கி வைத்தார். 400 பணியாளர்கள் கலந்து கொண்டனர். இனி அந்த பகுதிகளில் குப்பை கொட்ட கூடாது என நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
Next Story