அணை கட்டிய மன்னர் பிறந்தநாள் விழா

அணை கட்டிய மன்னர் பிறந்தநாள் விழா
X
பேச்சிப்பாறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை கட்டிய திருவிதாங்கூர் மன்னர் ராமவர்மா ஸ்ரீமூலம் திருநாளின் 168-வது பிறந்தநாள் விழா, மற்றும்   அணையை அமைத்த இங்கிலாந்து நாட்டு பொறியாளர் கம்ப்ரி அலெக்சாண்டர் மிஞ்சின் 112-வது நினைவு நாள் விழாக்கள் நேற்று   பேச்சிப்பாறை அணை பகுதியில் நடந்தது. குமரி பாசன சபை தலைவர் வின்ஸ் ஆன்றோ, அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்தனர்.
Next Story