திற்பரப்பில் இன்று வெள்ளப் பெருக்கு

X
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முழுவதும் தொடர் கனமழை பெய்ததால் மாவட்டத்தில் சில பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக திற்பரப்பு பகுதியில் அதிகபட்சமாக 182 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகமானதால் அருவியில் இன்று 26-ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
Next Story

