போக்குவரத்து விதிமீறல்: டிராக்டர்கள் பறிமுதல்

X
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி ஆகியோர் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அதில், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 3 டிராக்டர்கள் மற்றும் சுமை வாகனத்தை முறையான அனுமதி, ஆவணங்கள் இன்றி கட்டுமான பணிகளுக்hகன கற்கள், ஜல்லிகள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story

