மேஜை நாற்காலிகளை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-2004 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.அப்போது முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளிக்கு ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான மேஜை மற்றும் நாற்காலிகளை வழங்கினர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story

