விரலில் சிக்கிய மோதிரம்: தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்!

விலை குறைந்த கழிவு மெட்டல் மோதிரங்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை.
கோயம்புத்தூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில், 25 வயது நபரின் கைவிரலில் மோதிரம் சிக்கி விரல் வீங்கி எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. உதவி கோரியதையடுத்து, அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மோதிரத்தை வெட்டும் உபகரணங்களும், நரம்பு நூல் முறையும் பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரம் போராடி பாதுகாப்பாக மோதிரத்தை அகற்றி விரலை மீட்டனர். தீயணைப்பு அதிகாரிகள், குறைந்த விலை கழிவு மெட்டல் மோதிரங்கள் இவ்வகை சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தனர்.
Next Story