புதுகை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

X
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தினை முன்னிட்டு, கலெக்டர் அருணா இன்று (செப்.26) விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பின் மாற்றுதிறனாளிகளுக்கு தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர், மாற்றுத்திறனாளி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் உள்ளனர்.
Next Story

