பொய்யாமணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

உறுதிமொழி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் பகுதி - 2 என்ற திட்டம் தொடர்பாக திறந்தவெளி கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்வது குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக பொதுமக்களுடன் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் தொடங்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம் தீர்மானத்தை வாசித்தார். அதில் திறந்தவெளி மலம் கழித்தலற்ற கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்வது குறித்த தீர்மானத்தை பொதுமக்கள் முன்பு நிறைவேற்றப்பட்டது. பிறகு அனைவரும் எழுந்து நின்று சுகாதார முறையில் கழிவறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
Next Story