வன்கொடுமை நிகழ்வுகளை தடுத்து நிறுத்தவும்,வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடை முறைபடுத்த வலியுறுத்தியும தமிழ் புலிகள் கட்சியினர் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம்
Tiruchengode King 24x7 |26 Sept 2025 4:05 PM ISTதமிழ் புலிகள் கட்சி சார்பில் வன்கொடுமை தாக்குதலை கண்டித்தும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப் படுத்த வலியுறுத்தியும் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிர் நீத்த நீலவேந்தன் நினைவு நாள் படத்திற்கு மலர் தூவி மரியாதை
அருந்ததியர் உள்ள இட ஒதுக்கீட்டிற்காக போராடி தன் உயிரை நீத்த மறைந்த நீலவேந்தன் நினைவு நாளைஒட்டி திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததிருவுருவப் படத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன் மாநில செய்தி தொடர்பாளர் செந்தமிழன் மாநில கொள்கை விளக்கத் துணைச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தொடரும் வன்கொடுமை தாக்குதல்களை கண்டித்தும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப் படுத்த வலியுறுத்தியும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தமிழ் புலிகள் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்குதமிழ் புலிகள் கட்சியின் நகரச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார் மாவட்ட துணைச் செயலாளர்கள் வட்டூர் மாதேஷ், ரவிச்சந்திரன், மண்டல துணை செயலாளர் சிவசங்கர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் மாநில செய்தி தொடர்பாளர் செந்தமிழன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் கார்த்திக் மாநில இளம்புலிகள் துணைச் செயலாளர் அறிவித்தமிழன் மாநில அமைப்பு தலைமைச் செயலாளர் சிவா மண்டல செயலாளர்கள் உதய பிரகாஷ் மாவட்ட செயலாளர் வினோத் சேகுவாரா மாவட்ட செயலாளர்கள் குமரவேல், குரு,ஆகியோர் மற்றும்20 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தொடரும் வன்கொடுமை தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Next Story


