புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்த எம் எல் ஏ

புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்த எம் எல் ஏ
X
புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்த எம் எல் ஏ
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடபட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 14.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா மற்றும் நெமந்தம் ஊராட்சி பாக்குவாஞ்சேரி கிராமத்தில் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தசரதன், விசிக ஒன்றிய செயலாளர் மேகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம், நிர்வாகிகள் முனுசாமி ஜானகிராமன், தென்னக செல்வன், தம்பிதுரை, பன்னீர்செல்வம், தமிழ்மாறன், அருள்மொழிவர்மன், பிரகாஷ், திருவேங்கடம், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story