இலத்தூர் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

இலத்தூர்  ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்  சட்டமன்ற உறுப்பினர்  பங்கேற்பு!
X
இலத்தூர் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பங்கேற்பு!
இலத்தூர் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்றத் தொகுதி இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் மடையம்பாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தசரதன், ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ். பாபு, ஆகியோர் கலந்துகொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பருவதம் வரதன், விசிக ஒன்றிய செயலாளர் மேகநாதன், அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story