கோவை: திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய ஆண் நண்பர் மீது புகார் !

X
பீளமேடு பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பழக்கமாகி திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த கிஷோர் மீது நடவடிக்கை எடுக்காததால், அர்ச்சனா என்ற பெண் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அர்ச்சனா புகாரில், கிஷோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தற்போது கருவுற்ற நிலையில் கருவை கலைக்க மிரட்டியதாகவும் கூறினார். முன்னதாக கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி உள்ளார். அர்ச்சனா, கிஷோர் தன்னை திருமணம் செய்யவோ அல்லது கைது செய்யவோ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

