போச்சம்பள்ளி: அனுமதியின்றி செயல்பட்ட குவாரி ஏலம்.

போச்சம்பள்ளி: அனுமதியின்றி செயல்பட்ட குவாரி ஏலம்.
X
போச்சம்பள்ளி: அனுமதியின்றி செயல்பட்ட குவாரி ஏலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மல்லபாடி பகுதியை சேர்ந்த ஒருவர் போச்சம்பள்ளி வட்டம் நாகரசம்பட்டியில் அரசின் அனுமதியின்றி குவாரி நடத்தி வந்தார். இதை அடுத்து அந்த குவரிக்கு சீல் வைக்கப்பட்டு, அவருக்கு அபராத தொகை யாக ரூ.3 கோடியே 29 லட் சத்து 402 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அபராத தொகை செலுத்தாமல் நிலு வையில் இருந்ததால், அவருக்கு சொந்தமான குவாரி செயல்பட்டு வந்த நிலத்தை ஏலம் விட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் படி நேற்று போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) க்ரிதி காம்னா முன்னிலை யில் தாசில்தார் சத்யா ஏலம் விட்டார். இந்த ஏலத்தில் போச்சம் பள்ளி பகுதியை சேர்ந்த வர்கள் கலந்து கொண்ட னர். இதில் அதிகபட்சமாக ரூ.11 லட்சத்து 12 ஆயிரத் திற்கு ஏலம் எடுத்தார்
Next Story