உப்பிடமங்கலம்- பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

உப்பிடமங்கலம்- பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.
உப்பிடமங்கலம்- பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி வடக்கு ஒன்றிய தலைவர் சிந்தியா நடேசன் கிருஷ்ணாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் கோபிநாத் கிழக்கு ஒன்றிய தலைவர் பாலுசாமி தாந்தோணி மேற்கு ஒன்றிய தலைவர் லட்சுமணன் கடவூர் தெற்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் கடலூர் வடக்கு ஒன்றிய தலைவர் ரமேஷ் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை கிருஷ்ணாராபுரம் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல் முருகன் மற்றும் கோபிநாத் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story