திருச்செங்கோடு தாலுக்கா மொளசி ஊராட்சி முனியப்பன் பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிர்ப்பு போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் செல்ல பாதை அமைப்பு பரபரப்பு

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன் பாளையம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு இருந்த நிலையில் போலீஸ் உதவியுடன் பாதை அமைக்கும் பணி நடந்தது கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது போலீஸ் படை குவிக்கப் பட்டதால் முனியப்பன் பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
திருச்செங்கோடு தாலுக்கா மொளசி ஊராட்சி முனியப்பம் பாளையம் காவிரி ஆற்றங்கரையில் முதல்வரின் முன்னோடி திட்டத்தின் கீழ் இரண்டு கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை பாதுகாப்பற்ற பகுதியில் அமைக்கப்படுவதாகவும்தகன மேடைக்கு செல்லும் வழி தங்களது பட்டா நிலத்தில் அமைவதாகவும் கூறி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பொதுப்பணித் துறைஉதவி செயற்பொறியாளர் சாந்தி திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி மற்றும் வருவாய் ஆய்வாளர் பிரியா கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் ஒன்றிய உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் காவல் துறையினர் பாதுகாப்புடன் அதிரடி நடவடிக்கை எடுத்து பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இன்று அந்தப் பாதை வழியாக எரிவாயு தகன மேடை அமைக்க டிப்பர் லாரிகள் மூலம் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப் பட்டது. அவ்வாறு கொண்டு செல்லும்போது போராட்டக்காரர்கள் லாரிகளை தடுக்கவோ,மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்களோ என கருதிய பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்பு கேட்டதன் அடிப்படையில் திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் திருச்செங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி ஊரக காவல் நிலைய ஆய்வாளர் தீபா பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார்,மல்ல சமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சுதா,வெப்படை காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர்தவமணி மொளசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் முனியப்பன் பாளையம் பகுதியில் குவிக்கப்பட்டனர். ஆனால் எதிர்பார்த்தபடி போராட்டக் காரர்களே ஊர் பொதுமக்களோ எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனாலும் மாலை வரை காத்திருந்த போலீசார் பொக்லைன் மற்றும் புல்டோசர் உதவியுடன் பாதையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு அதே பாதை வழியாக கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரிகள் செல்ல ஏற்பாடு செய்தனர் இதனால் முனியப்பன் பாளையம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story