திருக்காம்புலியூர்- சரக்கு வாகனங்கள் மோதி இருவர் படுகாயம்.

திருக்காம்புலியூர்- சரக்கு வாகனங்கள் மோதி இருவர் படுகாயம்.
திருக்காம்புலியூர்- சரக்கு வாகனங்கள் மோதி இருவர் படுகாயம். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அலங்காகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் வயது 43. டாட்டா மினி வேன் டிரைவர். இவர் புதன்கிழமை அன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் அவரது வேனைஓட்டி வந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அனைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் வயது 37 ஆகிய இருவரும் நிறுத்தி இருந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை சாலை விதிகளுக்கு புறம்பாக அதே இடத்தில் நிறுத்தி இருந்ததால் ராமகிருஷ்ணன் ஒட்டி வந்த டாடா மினி வேன் பொலிரோ பிக் அப் வேன் பின்னால் மோதிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுப்பிரமணி மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் இருவரையும் ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தத்தனர். சம்பவ தொடர்பாக ராமகிருஷ்ணன் அளித்த புகாரில் வாகனத்தை சாலை விதிகளுக்கு புறம்பாக நிறுத்திய தினேஷ் குமார் மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story