அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணி திட்ட முகாம் துவக்க நிகழ்ச்சியில் போதை பொருள் ஒழிப்பு, நெகிழிப்பை ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு

X
அருப்புக்கோட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணி திட்ட முகாம் துவக்க நிகழ்ச்சியில் போதை பொருள் ஒழிப்பு, நெகிழிப்பை ஒழிப்பு குறித்த மாணவ மாணவியர்களின் எளிமையான நடன நாடக நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த கிராம மக்கள்; பாட்ஷா - ஆண்டனி வசனத்துடன் போதை பொருள் ஒழிப்பு நாடகம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மேட்டு தொட்டியாங்களம் கிராமத்தில் செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் நாட்டு நல பணித்திட்ட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களின் நடன, நாடக, பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போதை பொருள் ஒழிப்பு நெகிழிப்பை ஒழிப்பு குறித்து மாணவ மாணவியர்களின் எளிமையான பாடல் மற்றும் நாடக நிகழ்ச்சிகளை கிராம பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அதிலும் குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாணவ மாணவியர்களின் பாட்ஷா படத்தில் வரும் கொஞ்சம் அங்கே பாரு கண்ணா என்ற பாட்ஷா ஆண்டனி வசனத்துடன் நடைபெற்ற நாடக நிகழ்ச்சி காண்போரை ரசிக்க வைத்தது. மேலும் இந்த முகாமில் மாணவியர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அத்துடன் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் இணைந்து மேட்டு தொட்டியாங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டனர். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் சித்த மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோலைமலை, செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரீவா, நாட்டு நல பணி திட்ட அலுவலர் கார்த்திகேயன், உதவி திட்ட அலுவலர் பொன்ராஜ், மேட்டு தொட்டியாங்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பிரேமலதா, உதவி தலைமை ஆசிரியை விமலா மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

