வானவிழி பிரிவு-டூவீலர்கள் மோதல். பெண் படுகாயம்.

வானவிழி பிரிவு-டூவீலர்கள் மோதல். பெண் படுகாயம்
வானவிழி பிரிவு-டூவீலர்கள் மோதல். பெண் படுகாயம். கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரி குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி செல்வராணி வயது 50. இவர் புதன்கிழமை அன்று மாலை 4:30 மணியளவில் கோவை கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்றார், அப்போது வானவிழி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கோர குத்தி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் செல்வராணி டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வ ராணியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து செல்வராணி அளித்த புகாரில் விபத்து ஏற்படும் வகையில் டூவீலரை ஓட்டிய லோகேஷ் மீது க.பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story