மனைவியாக வாழ்ந்து வந்த நபர் பிரிந்ததால், ஆட்டோ ஓட்டுனர் தீக்குளிப்பு

மனைவியாக வாழ்ந்து வந்த நபர் பிரிந்ததால், ஆட்டோ ஓட்டுனர் தீக்குளிப்பு
X
குமாரபாளையத்தில் அடுத்தவர் மனைவியுடன் வாழ்ந்து வந்த நபர், மனைவி இவரை விட்டு பிரிந்ததால் தீக்குளித்தார்.
குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் முனிராஜ், 36. ஆட்டோ ஓட்டுனர். இவர் வேறொருவர் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வந்ததால், இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் இவரை விட்டு மனைவியாக வாழ்ந்து வந்த நபர் பிரிந்து சென்றார். பலமுறை சேர்ந்து வாழ அழைத்தும் வரவில்லை என்பதால், இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று காலை 09:30 மணியளவில், தன் வீட்டின் முன்பு மண்ணெண்ணெயை தன்  மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கம்  உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நேரில் வந்த போலீசார் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
Next Story