டூவீலர், ஆம்னி கார் மோதிய விபத்தில்  தனியார் நிறுவன பணியாளர் பலி

டூவீலர், ஆம்னி கார் மோதிய விபத்தில்  தனியார் நிறுவன பணியாளர் பலி
X
குமாரபாளையத்தில் டூவீலர், ஆம்னி கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பணியாளர் பலியானார்.
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, கவுரி தியேட்டர் அருகே நேற்றுமுன்தினம்  இரவு 08:00 மணியளவில், பஜாஜ் பிளாட்டினம் டூவீலர் மற்றும்  மாருதி ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் வந்த நபர் படுகாயமடைந்து குமாரபாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்ததில், டூவீலரில் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன், 30, என்பதும், தனியார் நிறுவன பணியாளர் என்பதும் தெரியவந்தது. மாருதி கார் ஓட்டுனர் மயக்க நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story