கருப்பத்தூரில் சாலையை கடந்து சென்ற மாடு.டிராவல்ஸ் கார் மீது மோதி விபத்து.

கருப்பத்தூரில் சாலையை கடந்து சென்ற மாடு.டிராவல்ஸ் கார் மீது மோதி விபத்து.
கருப்பத்தூரில் சாலையை கடந்து சென்ற மாடு.டிராவல்ஸ் கார் மீது மோதி விபத்து. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே எழுநூற்றுமங்கலம்.அரிஜனதெருவை சேர்ந்தவர் சத்யநாதன் வயது 28 கார் டிரைவர். புதன்கிழமை மாலை 5 மணி அளவில் திருச்சி -கரூர் சாலையில் இவரது காரில் குளித்தலை தண்ணீர் பள்ளி மற்றும் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இரண்டு ஆண்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு சென்றார். இவரது கார் கருப்பத்தூர் ஐயப்பன் கோவில் அருகே சென்றபோது திடீரென மாடு ஒன்று சாலையைக் கடந்து சென்றது. இதனால் தனது காரை திடீரென பிரேக் இட்டு நிறுத்தினார். அப்போது அதே சாலையில் இவரது காருக்கு பின்னால் வந்த ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த அசோக் லேலண்ட் டிராவல்ஸ் சத்யநாதன் ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சத்யநாதன் மற்றும் காரில் பயணித்த ஏழு பேருக்கும்காயங்கள் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சத்தியநாதன் அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய கோபாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல் துறையினர்.
Next Story