த வெ.க தலைவர் விஜய் நாளை கரூரில் மக்களை சந்திக்கிறார்-புஸ்லி ஆனந்த் தகவல்.
த வெ.க தலைவர் விஜய் நாளை கரூரில் மக்களை சந்திக்கிறார்-புஸ்லி ஆனந்த் தகவல். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வர உள்ள தேர்தலை முன்னிட்டு மக்களை நேரடியாக சந்தித்து பரப்புரை செய்து வருகிறார். பொதுமக்களை சந்திக்கும் இடத்தை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் கரூர்-ஈரோடு சாலையில் வேலுச்சாமிபுரத்தில் பொதுமக்களை சந்திக்கும் இடத்தை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளரிடம் தெரிவித்த அவர் வேலுச்சாமிபுரத்தில் நாளை சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு பொதுமக்களை கட்சியின் தலைவர் விஜய் நேரடியாக சந்தித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
Next Story





