மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளின் குறைகளை கேட்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அபிராமி இணை இயக்குனர் சிங்காரம் கரூர் ஆர்டிஓ முகமது பைசல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளின் தனிப்பட்ட மற்றும் ஊர் பொதுமக்களின் தேவை மற்றும் பாதிப்பு குறித்த புகார்களை ஏற்கனவே அளித்ததன் பேரில் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆட்சியர் தங்கவேல் முன்பு விளக்கம் அளித்தனர். ஒரு சில பிரச்சனைகளை ஆய்வு செய்து உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டார்,
Next Story