ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் மற்றும் ரோட்டரி கிளப், அரசு அரசு கலை கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

X
அரியலூர், செப்.27- ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் மற்றும் ரோட்டரி கிளப், அரசு அரசு கலை கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், ரோட்டரி கிளப் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். ஊர்வலத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆனது ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கி அண்ணாசிலை, நான்கு ரோடு வழியாக ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது. கலைப்படைந்த மாணவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. ஊர்வலத்தின் போது கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தி கோஷம் எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இதில் அரியலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்பசாமி, ஜெயங்கொண்டம் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், போக்குவரத்து போலீசார்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது சாலையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்த 50 நபர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் டிபன் பாக்ஸை பரிசாக வழங்கி பாராட்டினார்.
Next Story

