உலக மருந்தாளர்கள் தினத்தை முன்னிட்டு ராசிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருந்தாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்...

X
Rasipuram King 24x7 |26 Sept 2025 9:38 PM ISTஉலக மருந்தாளர்கள் தினத்தை முன்னிட்டு ராசிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருந்தாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்...
உலக மருந்தாளர்கள் தினத்தை முன்னிட்டு ராசிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருந்தாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்... தலைமை மருந்தாளர் பணியிடம் காலியாக உள்ளதாகவும்,2 மருந்தாளர்கள் மட்டுமே உள்ளதால் பணி சுமை அதிகமாக உள்ளதாக என வேதனையுடன் கூறிய தலைமை மருத்துவ அலுவலர்... உலக மருந்தாளர்கள் தினமானது பல இடங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உலக மருந்தயாளர்கள் தினமானது கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தலைமை மருத்துவ அலுவலர் கலைச்செல்வி மற்றும் ஓய்வு பெற்ற தலைமை மருந்து ஆளுநர் ,ஏ.ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருந்தாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சகப் பணியாளர்களுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவ அலுவலர் கலைச்செல்வி பேசுகையில் தற்போது மருத்துவமனையில் தலைமை மருந்தாளர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், 2 மருந்தாளர்கள் மட்டுமே உள்ளதால் பணி சுமை அதிகமாக உள்ளதாக வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்..
Next Story
