ராசிபுரம் அருகே கிழிந்த டயர் மற்றும் வெடிக்கும் நிலையில் செல்லும் அரசு பேருந்து. அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை...

X
Rasipuram King 24x7 |26 Sept 2025 9:46 PM ISTராசிபுரம் அருகே கிழிந்த டயர் மற்றும் வெடிக்கும் நிலையில் செல்லும் அரசு பேருந்து. அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தற்போதைய பேருந்து நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் 4B என்ற அரசு பேருந்து ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பட்டணம், வடுகம்,புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட வழியாக சென்று மீண்டும் ராசிபுரத்தை வந்து அடைகிறது.இந்த நிலையில் பேருந்தில் 30க்கு மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஆனது சென்று கொண்டிருந்த நிலையில் பேருந்தின் வலது புற பின் பக்க டயர் கிழிந்து மற்றும் வெடிக்கும் நிலையில் பேருந்தானது இயங்கி வருகிறது.பெரும் விபத்து நடைபெறுவதற்கு முன்பே பேருந்தின் டயரை மாற்ற வேண்டும் எனவும், இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசிபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன் பக்க டயர் கழண்டு ஓடிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும் பேருந்து ஓட்டுநர்கள் தினம் தோறும் பேருந்தை முழுமையாக சரி பார்த்து இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது...
Next Story
