சுரண்டை அருகே பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

சுரண்டை அருகே பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு
X
பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை மாஞ்சோலை தெருவைச் சோ்ந்த தேனையா மனைவி திருமலையாச்சி (75). இவா் சுரண்டை சென்று அங்கிருந்து சோ்ந்தமரம் செல்வதற்காக அரசுப் பேருந்தில் பயணித்தாா். சுரண்டை அருகே ஆலடிப்பட்டி விலக்குப் பகுதியில் பேருந்து சென்றபோது, அவா் அணிந்திருந்த 24 கிராம் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக தெரியவந்ததாம். புகாரின்பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story