முத்தையாபுரம் சாலையில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

X
தூத்துக்குடி முத்தையாபுரம் – ஸ்பிக்நகர் நான்குவழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் நடைபெறுவதாக பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். சாலைப் பகுதி கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் போக்குவரத்து நெரிசல், தவறான திசையில் வாகன ஓட்டம், மதுக்கடை அருகே மக்கள் மற்றும் வாகன நெருக்கடி போன்ற பிரச்சினைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விபத்துகளைத் தடுக்க உடனடியாக அணுகுசாலை அல்லது மேம்பாலம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story

