காந்திகிராமம் அருகே டூவீலர்கள் மோதல். மூன்று பேர் காயம்.

காந்திகிராமம் அருகே டூவீலர்கள் மோதல். மூன்று பேர் காயம்.
காந்திகிராமம் அருகே டூவீலர்கள் மோதல். மூன்று பேர் காயம். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 32.இவரது மாமனார் தியாகராஜன் வயது 47. இருவரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் கரூர் காந்திகிராமம் பகுதியில் செயல்படும் தனியார் பிரியாணி கடை அருகே சென்றபோது, கரூர் தெற்கு காந்திகிராமம் கம்பன் தெருவை சேர்ந்த பொன்னர் வயது 41 என்பவர் மற்றொரு டூவீலரில் வேகமாக வந்து சாலையை கடக்க முயன்ற போது கார்த்திக் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் சாலையில் விழுந்து வாகனங்களில் பயணித்த மூன்று பேரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரில் விபத்து ஏற்படும் வகையில் டூவீலரை ஒட்டிய பொன்னர் மீது தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story