கோவை: குடியிருப்பு பகுதியில் குரங்கு அச்சுறுத்தல் !
கோவை மாவட்டம் கதிர் நாயக்கன் பாளையம் லட்சுமி நகர் மற்றும் ரேணுகாபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு ஒற்றை குரங்கு சுற்றித் திரிந்து வருகிறது. வீடுகளின் மாடி, தெருக்கள் என சுதந்திரமாக நடமாடும் அந்தக் குரங்கால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சிறுவர், முதியோர் ஆகியோர் வெளியே செல்வதற்கும் பயந்து வருவதாக கூறப்படுகிறது. குரங்கு பழங்களையும்,8 வீட்டின் உணவுப்பொருட்களும் பிடுங்கிச் செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள், குரங்கினை பாதுகாப்பாகப் பிடித்து காடுகளில் விடுவதற்கான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



