கோவை ஆய்வாளர் பானுமதி சாலை விபத்தில் உயிரிழப்பு!

கோவை ஆய்வாளர் பானுமதி சாலை விபத்தில் உயிரிழப்பு!
X
ஈச்சர் வாகனம் மோதி காவல் ஆய்வாளர் பலி.
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி (52) மீது அரிசி மூட்டைகள் ஏற்றிய ஈச்சர் வாகனம் மோதியது. கடுமையான காயத்துடன் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பரிசோதனையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். சம்பவத்தைச் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் மரணம் காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story