காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி !

X
கோவை மாவட்டம் வடவள்ளி அருகே பொம்மனம்பாளையம் பகுதியில் தொழிலாளி செந்தில் (42) மீது காட்டு யானை தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டது. செந்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது யானை தாக்கியது. குழந்தைகள் காயமின்றி தப்பினர். படுகாயமடைந்த செந்தில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு தொண்டாமுத்தூர் பகுதிகளில் அடிக்கடி அட்டகாசம் செய்யும் “ரோலக்ஸ்” எனப்படும் காட்டு யானையே காரணம் என வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Next Story

