தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்து ஒருவர் பலி

தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்து ஒருவர் பலி
X
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த வேன் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது வானில் பயணித்த 13 நபர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்12நபர்கள் காயங்களுடன் அரசு மருத்துவமனை அனுமதி
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென் ஜோசப் பள்ளி எதிரே பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் பலி 12 பேர் படுகாயம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்திலிருந்து சுற்றுலா வேனில் 13 பேர் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள கலியபெருமாள் கோவிலுக்கு புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை சாமி தரிசனம் செய்வதற்காக சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சென் ஜோசப் பள்ளி எதிரே வேனின் பின்புறம் வலது பக்க டயர் வெடித்தது இதில், ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது வேனில் சென்ற ஆத்துரை சேர்ந்த ஜீவா (வயது 45) என்பவர் உடல் நசுங்கி பலியானார், மேலும் வேன் ஓட்டுனர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரதி பரிசோதனைக்கு அரசு பொது மருத்துவமனைக்கு அறிவித்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தேசிய நெடுஞ்சாலையில் வேன் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,
Next Story