திருச்செங்கோடு மாணிக்கம் பாளையம் பகுதியில் சோலார் பேனலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சாகும் வரை உண்ணாவிரதம்

X
Tiruchengode King 24x7 |27 Sept 2025 4:04 PM ISTதிருச்செங்கோடு அடுத்த மாணிக்கம் பாளையம் பகுதியில் 70 விவசாயிகள் ஏரியிலிருந்து நீர் எடுக்க சோலார் பேனல் அமைத்து பயன்படுத்தி வரும் நிலையில் அதனை ஒருதலை சார்பாக அகற்ற முயற்சியும் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அரசினரை கண்டித்துவழக்கறிஞர் செந்தில்குமார் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்
திருச்செங்கோடு தாலுகா மாணிக்கம் பாளையம் பகுதியில்உள்ள ஆட்டையாம் குட்டை ஏரியில் விவசாயத்திற்கு பயன்படுத்த சோலார் பேனல் மூலம் மோட்டார்கள் அமைத்து 70குடும்பத்தைச் சேர்ந்த விவசாயிகள் நீர் எடுத்து விவசாயம் செய்து வந்த நிலையில் சோலார் பேனரை அகற்ற தொடர்ந்து முயற்சித்து வரும வருவாய் துறையினரை கண்டித்துவழக்கறிஞர் செந்தில்குமார் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று தொடங்கி உள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செந்தில்குமாருக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் வந்து வாழ்த்து சொல்லி சற்று நேரம் அவருடன் அமர்ந்து செல்கின்றனர். போராட்டம் குறித்து செய்தியாளரிடம் பேசியதமிழக விவசாயிகள் சங்கம் மாநில சட்ட ஆலோசகர்,சுதந்திரப் போராட்ட தியாகியின் பேரன் வழக்கறிஞர் செந்தில்குமார் கூறியதாவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கூத்தம்பூண்டி ஊராட்சி சர்வே எண் 40/1 ஆட்டையான் குட்டை ஏரி என்ற ஒரு ஏரி உள்ளது இந்த ஏரிக்கு இயற்கையாக வந்த அணை வாய்க்கால் நீரானது தடைபட்டு போன காரணத்தால் நீண்ட ஆண்டுகளாக இதனுடைய தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடந்த இந்த சூழ்நிலையிலே அணை வாய்க்கால் அதனை ஒட்டி இருக்கக்கூடிய அணைவாய்க் கால் களில் இருக்கக்கூடிய தண்ணீரை இங்கு இருக்கக்கூடிய விவசாயிகளும் இந்த சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய 70க்கும் மேற்பட்ட விவசாயிகளும் ஒன்று சேர்ந்து மக்கள் பங்களிப்போடு கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்கு மேல இருக்கக் கூடிய தொகையை ஒன்று சேர்த்து ஒரு சோலார் மின்சக்தி அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் மூலமாக இந்த ஏரிக்கு செயற்கை முறையில் நீர் ஏற்று பாசனம் செய்து அதன் மூலமாக கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட குக் கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் அங்கு இருக்கக்கூடிய நீரி நிலைகளுக்கும் அதிக அளவிலே நிலத் நீர்மட்டத்தை உயர்த்தி வந்த இந்த சூழலில் இங்கு இருக்கக்கூடிய தனிநபர் சிலர் இந்த ஏரியை ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தூண்டுதளின் பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை தாக்கல் செய்து அந்த நீதி பேராணையை அரசுத்துறை நிறுவனங்களான ஊராட்சி துறை நீர்வளத்துறை வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சரிவர அந்த வழக்கை நடத்தாத காரணத்தால் அந்த வழக்கில் இந்த சோலார் மின்சக்தி என்பது ஆக்கிரமிப்பாக கருதப்பட்டு எடுப்பதற்கான ஒரு முன் முயற்சி நடந்து வருகின்றது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பட்சத்தில் இந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளினுடைய வாழ்வாதாரமும் பொதுமக்களுக்கான நீர்வள ஆதாரமும் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள தற்பொழுது பசுமையாக இருக்கக்கூடிய விவசாய சாகுபடி நிலங்கள் பாழ டைந்து பாலைவனம் போல் ஆகி மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெறக்கூடிய ஒரு சூழல் இருந்து வருகின்றது ஆகவே அதை தடுக்கும் நோக்கத்திற்காக இந்த சோலார் பேனலை இதே இடத்தில் நிறுவப்பட்ட இடத்திலேயே எங்களுக்கு அனுமதி வழங்குவதோடு மட்டுமல்லாமல் இடைவிடாது தொடர்ந்து நீரேற்றம் இந்த ஏரியிலே செய்யப்பட வேண்டும் காரணத்திற்காக கடந்த 08.09.25 லிருந்துமாபெரும் உண்ணாவிரத போராட்டம்நடந்த நிலையில்போராட்டம் நடத்திய எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தடையானை பெற்று விட்டால் சோலார் பேனலை அகற்ற மாட்டோம் என கூறினார்கள். மற்ற ஆக்கிரமிப்பு களை எல்லாம் அகற்றாமல் இந்த சோலார் பேனலை மற்றும் ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்றுவதில் யாரோ சிலரை திருப்திப்படுத்துவதற்காக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதே விஷயம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசுஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முற்படுகின்றனர் நாங்கள் போட்டுள்ள வழக்கை மதித்து நடக்க வேண்டும் 156538/2025 Dtd 24.09.2025என்ற எண்ணில் வழக்கு போட்டுள்ளோம் ஆனாலும் அந்த வழக்கை மதிக்காமல் அதிகாரிகள் சோலார் பேனலை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் நான் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன் என கூறினார்.
Next Story
