ஓசூர்: டூவீலர் மீது கார் மோதி தனியர் நிறுவன ஊளியார் பலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள களர்பதி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பாஸ்கர் (22) இவர் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்வம் அன்று இரவு பெங்களூரு-கிருஷ்ணகிரி சாலையில் ஓசூரில் டூவீலரில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த குறித்து தகவல் அறிந்து வந்த அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

