இளம் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

பாலக்கோடு அருகே இளம் என்னை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு
பாலக்கோடு அடுத்த மாவேரி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த புவனா - சங்கர் தம்பதியினர் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் புவனா, கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு, கணவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சங்கருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்தது. இதையறிந்த புவனா, நேற்று கணவரின் வீட்டிற்குற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது சங்கரின் தாய் பழனியம்மாள், பூபதி, சாந்தி ஆகியோர் தகாத வார்த்தையால் திட்டி, புவனாவை தாக்கி தாலியை பிடுங்க முயன்றுள்ளனர். இதில் காயமடைந்த புவனாவை மீட்டு அக்கம்பக்கத்தினர் தர்மபுரி அரசு மருத்துவம் னையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்து புவனா கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு காவலர்கள் பழனியம்மாள், பூபதி, சாந்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story